Home Local news வேலைக்கு செல்ல புகையிரதத்தில் ஏற வந்த பெண், புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

வேலைக்கு செல்ல புகையிரதத்தில் ஏற வந்த பெண், புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

12

தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்வதற்காக புகையிரதத்தில் ஏற வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று காலை புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் வஸ்கடுவ, சிரில் மாவத்தையைச் சேர்ந்த சி.டி.சமரவீர முதலிகே சிந்தா பிரியதர்ஷனி என்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

இன்று காலை 6.03 மணியளவில் மருதானை நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் கொழும்பு நோக்கி பயணிக்க வந்த அவர், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த 940 இலக்க புகையிரதத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleபிறந்து ஏழு நாட்களான சிசுவை கொடூரமாக கொலை செய்த இளம் தாய்
Next articleஇன்றைய ராசிபலன் – 19/02/2023, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…