Home Jaffna News வேலியே பயிரை மேய்ந்த கதையாக யாழில் 2 வருட காலமாக சிறுமியை மிரட்டி துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி ...

வேலியே பயிரை மேய்ந்த கதையாக யாழில் 2 வருட காலமாக சிறுமியை மிரட்டி துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த இரு தமிழ் பொலிஸ் காவாலிகள்

11

யாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருட காலமாக, காணொளியை காட்டி, மிரட்டி துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவா் அழைத்து சென்று ஆட்கள் அற்ற வீடொன்றினுள் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் அதனை காணொளியாக எடுத்து வைத்திருந்த இருவரும் , கடந்த இரு வருட காலமாக சிறுமியை காணொளியை வைத்து மிரட்டி துஸ்பிரயோகத்துக்குட்பபடுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது , அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது , சிறுமி கடந்த 2 வருட காலமாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே இந்த விடயம் வெளிவந்துள்ளது.

இதேவேளை குறித்த இரு பொலிஸ் காவாலிகளும், தம்மிடம் இருந்த காணொளியை பாடசாலை சிறுவர்கள் சிலருக்கும் காண்பித்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articlefree Christmas dance apps available for both Android and iOS.
Next articleநெல்லியடி கூட்டு வன்புணர்வு – 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது