Home Local news வெட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

வெட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

9

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் (வயது30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு! - mutamil News - 24x7 Tamil Breaking News Website வெட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous article35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது
Next articleஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை கைது !