Home battinews விபத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் பலி

விபத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் பலி

13

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்த சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் அன்பாஸ் (17 வயது) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த வான், சைக்கிளில் வந்த மாணவன் மீது மோதி விட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இதன்போது, வானின் இலக்கத்தகடு கழன்று கீழே விழுந்துள்ளது.

விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleநண்பர்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிய 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
Next articleஇளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சஜித் கட்சியின் வேட்பாளர்..!