இலங்கையில் விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா?
நவீன மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியுடன் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகள் பல சாத்தியமாகி வருகின்றன.
இருப்பினும் இந்த விதை மாற்று சத்திர சிகிச்சைகள் பொதுவாக செய்யப்படுவதில்லை.
முதலில் விதை மாற்று சத்திர சிகிச்சைகள் ஏன் தேவைப்படுகின்றன⁉️
01. பிறவியிலேயே விதை இன்றி பிறத்தல்.
02. விபத்துக்களால் / Cancerஆல் விதைகள் இழக்கப்படல்.
03. Transgender surgeries: பெண் ஆணாக மாறும் சத்திர சிகிச்சை.
என்பவற்றை கொள்ளலாம்.
இது தவிர விந்து உற்பத்தி இன்மை, ஓமோன் (Testesterone) இன்மை என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால் இவற்றுக்காக சத்திர சிகிச்சை செய்யப்படுவதில்லை.
Testis Traplantஇல் உள்ள பிரச்சினை யாருடைய Testis Transplant பண்ணப்படுகிறதோ அவரின் DNA யினையே பிறக்கும் குழந்தை கொண்டிருக்கும்.
அதாவது விந்து உற்பத்தியின்போது Donorஇன் Germinal Cellsஇல் இருந்தே விந்து உற்பத்தி ஆவதால் இந்த குளறுபடி.
இந்த Ethical issue காரணமாக Testicular Transplant பொதுவாக செய்யப்படுவதில்லை.
விபத்து போன்ற சம்பவங்களில் விதை இழக்கப்பட்டால் / Transgender surgeries: செயற்கையான விதைகள் (Prosthetic Testis) வைத்து சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அதேபோல் விதைகளால் சுரக்கப்படும் Testesterone Hormon குறைவாக / சுரக்கப்படாமல் விடுமிடத்து அதற்கும் மருந்துகள் (Hormone Replacement Therapy) உண்டு.
குழந்தைப்போறுக்கு Sperm Donation உண்டு.
இப்படி பல மாற்று வழிகள் உள்ளதால் Testis Transplant செய்யப்படுவதில்லை.
உலகின் முதலாவது Testis Transplant 1978இல் மேற்கொள்ளப்பட்டது.
ஒத்த இரட்டையர்களாக பிறந்த குழந்தைகளில் ஒரு குழந்தை விதைகள் இல்லாமல் பிறந்ததால் மற்றைய குழந்தையின் இரண்டில் ஒரு விதை இக்குழந்தைக்கு மாற்றீடு செய்யப்பட்டது.
அதேபோல் இறுதியாக 2019இல் Serbia வைச் சேர்ந்த 36 வயதுடைய விதைகள் இன்றி பிறந்து வளர்ந்த இளைஞனுக்கு அவனது ஒத்த இரட்டையரான சகோதரனின் விதைகளில் ஒன்று மாற்றீடு செய்யப்பட்டது.
இவ்வாறு 3 Caseகளே பதிவாகி உள்ளன.
இது இவ்வாறு இருக்க இலங்கையில் சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாகி வருகிறது…
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எனக் கூறி கொழும்பு – புளுமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட மோசடி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள பத்திரிகை ஒன்று ) செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கென கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாயை வழங்கி குறித்த ஆணின் விதைப்பையை அகற்ற திட்டமிடப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சைக்காக இணங்கிக்கொள்ளப்பட்ட பணம் உரிய காலத்தில் வழங்கப்படாமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பின்னர் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்போதே, குறித்த விதைப்பையை அகற்றும் மோசடி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சை சட்டவிரோத வலையமைப்பாக மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு சிறுநீரகங்களைப் பெற்று விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்களை
கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சிந்திர ஜயசூரியவிடம் நேற்று அறிவித்தருந்தமையும் குறிப்பிடத்தக்கது
இலங்கையில் விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா?