Home vavuniya news வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

12

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குறித்த இளைஞர் சாவடைந்துள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவரே சாவடைந்துள்ளார்

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Previous articleஇரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த இளம் கற்பிணித்தாயும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!
Next articleசாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு !