Home vavuniya news வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன் கைது

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன் கைது

548
வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் (27) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், குறித்த சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 8 வயது சிறுவன்

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

acer Aspire 5 Slim Laptop computer, 15.6″ FHD IPS, AMD Ryzen 3 3350U Quad-Core Mobile Processor, 12GB DDR4 RAM, 512GB SSD, WiFi 6, Backlit KB, Fingerprint Reader, HDMI, Amazon Alexa, Windows 11, Silver

Previous articleயாழில் போதைக்கு அடிமையான இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு
Next article‘காதலும் கசக்கும்’- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here