Home Accident News வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

18
வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியா வில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி! வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி! வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

Previous articleசீருடையுடன் சாராயம் வாங்கி காசு கொடுக்காது தப்பி ஓடிய போலீசார்!! CCTV காட்சிகள் வெளியானது
Next articleஅளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்!