Home Local news லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை

லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை

6

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலானது காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்கள் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களை கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்ய முயற்சிக்கும்போது அவ்வாறான முறைப்பாட்டை சில காவல்நிலையங்கள் நிராகரிப்பதாகவும், இனிமேல் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

Previous articleகட்டணம் அதிகரிப்பு; இல்லையேல் 6 மணித்தியாலம் மின்வெட்டு
Next articleஇன்றைய ராசிபலன் – 28/12/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..