Home Uncategorized ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம்

ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம்

19

கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (17) இரவு 9:45 மணியளவில் இடம் பெற்றது.

ரயில்வே கடவையின் தடுப்புப் பலகை போடப்பட்டிருந்த நிலையிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையிலும் பழைய சிலாபம் வீதி திசையை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துள்ளது. இதன்போது கொச்சிக்கடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ரயில்வே கடவையின் தடுப்பு பலகையும் சேதமடைந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை, அபேசிங்கபுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம் - mutamil News - 24x7 Tamil Breaking News Website ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம் - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleமாணவிக்கு போதைப்பொருள் வழங்கி துஷ்பிரயோகம் ; A/L மாணவர்கள் இருவர் கைது
Next articleமாணவர்களுக்கு அதிபர் வழங்கிய மோசமான தண்டனை