Home Jaffna News யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடற்பரப்பில் 100 வரையான பயணிகளுடன் படகு ஒன்று தத்தளிப்பதாக தகவல்!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடற்பரப்பில் 100 வரையான பயணிகளுடன் படகு ஒன்று தத்தளிப்பதாக தகவல்!

10

யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடற்பரப்பில் சுமார் 100 வரையான வெளிநாட்டவர்களுடன் படகு ஒன்று தத்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக இலங்கை கடற்படையின் டோரா படகுகள் அப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் தற்போது துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக கப்பல் கரைக்கு வந்த பின்னரே மேலதிக விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅம்பாறை மாவட்டம் பாலமுனையில் இருந்து மாணவன் முஸம்மில் அஷாஸ் கால்பந்து வீரனாக இந்தியா பயணம்
Next articleஇன்றைய ராசிபலன் – 18/12/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..