Home Uncategorized யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதி மீண்டும் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதி மீண்டும் கைது!

8

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிசிக்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியமை, உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த யாழ்.மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியரின் தங்கச் சங்கிலி அறுத்தமை, அதே தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் தங்க சங்கிலியினையும் அறுத்தமை இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து திருடியமை போன்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், நகைகள் பெருமளவு பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து காணப்படுவதாகவும் பல தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதிலும் தப்பி ஓட முயற்சி செய்திருந்தவர் எனவும் கடந்த 26 ம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளவாலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Previous articleகாத்தான்குடியில் கடத்தல்; சந்தேகநபர் கைது
Next articleகொழும்பில் கார் மோதி ஆட்டோ சாரதி பலி!! காருக்குள் இருந்த பெண்ணுக்கு விளக்குமாறு பூசை!! (வீடியோ)