Home Jaffna News யாழ்.பருத்தித்துறையில் 17 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!

யாழ்.பருத்தித்துறையில் 17 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!

8

யாழ்.பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும்,

பின்னர் வீடியோ பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்தற்கு உள்ளனமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொியவருகின்றது.

குறித்த சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் – 04/01/2023, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleஇலங்கை யுவதி ஷோபனா விபத்தில் பலி