Home Jaffna News யாழ் நல்லூர் கோயில் அருகில் உள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்து வாள் வெட்டு!! ஒருவர் படுகாயம்!!

யாழ் நல்லூர் கோயில் அருகில் உள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்து வாள் வெட்டு!! ஒருவர் படுகாயம்!!

11

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞனொருவர் காயமடைந்துள்ளார்.

பண்டத்தரிப்பு அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் கலைக்ஸன் (வயது 21) எனும் இளைஞனே காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை(29) இரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleநீதிமன்ற உத்தரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!
Next articleகுழந்தை பலி: நாடகமாடிய இருவருக்கு விளக்கமறியல்