Home Accident News யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இராணுவ வாகனம் மோதி கோர விபத்து, ஒருவர் பலி..

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இராணுவ வாகனம் மோதி கோர விபத்து, ஒருவர் பலி..

8

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஏ-09 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்றுள்ளது.

பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்றுசாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleபேருந்திலிருந்து துாக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு, சாரதி கைது..
Next articleஇரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் நால்வருக்கு காயம்