Home Jaffna News யாழில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு!

யாழில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு!

12

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு (16) 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஊழியரை வாளுடன் துரத்தும் காணொளியும் பகிரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பிரதீப் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!
Next article’சமூக பிரிவை சுட்டிக்காட்டி இழிவாக பேசியதால் கொலை செய்தேன்’