பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில், குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை பெண்குழந்தையை துஸ்பிரயோகம் செய்ததாக, குழந்தையின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிசாரால் குழந்தையை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் குழந்தை துஸ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து தந்தை கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் கசிப்பு, கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையானவர். அவற்றை வாங்க பணம் பெறுவதற்காக, தனது மனைவியை விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.