Home Jaffna News யாழில் ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ்காரனுக்கும் 29 வயது யுவதிக்கும் நடந்த கதி!!

யாழில் ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ்காரனுக்கும் 29 வயது யுவதிக்கும் நடந்த கதி!!

9

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleவர்த்தகரின் மரணம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி செய்தி
Next articleமுல்லைத்தீவு கலையரசி நகைக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு