Home Jaffna News யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

12

யாழ். வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முகங்களை கறுப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதம் விளைவித்ததுடன் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் 2 இலட்சத்துக்கு அதிகமான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 21/12/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleதென்னிலங்கையில் தொடரும் மர்ம கொலைகள்! கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு