Home Accident News யாழில் விபத்து! 25 வயது இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழில் விபத்து! 25 வயது இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

19

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஊர்காவல்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் நயினாதீவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.

இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விபத்து! 25 வயது இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்) - mutamil News - 24x7 Tamil Breaking News Website யாழில் விபத்து! 25 வயது இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்) - mutamil News - 24x7 Tamil Breaking News Website யாழில் விபத்து! 25 வயது இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்) - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleபடுக்கையில் இறந்து கிடந்த இசைமாறன்- பரிசோதனையில் வெளியான தகவல்
Next articleயாழில் 14 வயது சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடாத்திய 20 வயது இளைஞன் கைது