ஆவாகுழு எனப்படும் போதைவஸ்து பாவனை மற்றும் கொள்ளையர்களைக் கொண்ட குழுவின் அங்கத்தவனான ஜெகன் என்பவனின் கொடூரச் செயல்களை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம்.
யாழ் மருதனார்மடம் சந்தை அருகாமையில் வறுமைக்கோட்டில் வாழும் வியாபரியிடம் ஜெகன் மற்றும் அடியாட்கள், 10000 ரூபாய் கொடுத்துவிட்டு மாலை ரூபா12000 தரவேண்டும் என்று பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார்கள்.
பின்னர் மாலை சென்று பணத்தை தருமாறு கூறியுள்ளார்கள். அந்த ஏழை வியாபரியிடம் 10750ரூபாய் மட்டும் தான் இருக்கின்றது. 10000 ரூபாய் இப்போது தருகிறேன் மிகுதி மறுநாள் வட்டி போட்டு தருகிறேன், மிகுதி 750 ரூபாய்க்கு வீட்டுச் செலவுக்கு தேவை என்று கூறியுள்ளா ர்.
அதற்கு ஜெகன் அந்த ஏழையைக் கொடூரமாக தாக்கியும் அவரின் மரக்கறியினை வீசியும் நடு றோட்டில் மிருகத்தனமாக தாக்கி விட்டு பின்னர் கலட்டி என்னும் இடத்துக்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளான். தற்போது குறித்த வியாபாரி காணாமல் ஆக்கபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவனுக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சிலரும் பொலிஸ்தரப்பைச் சேர்ந்த சிலரும் கொடுத்து வரும் ஆதரவால் இவனின் கொடூரங்கள் மிகவும் அதிகரித்துக் கொண்டு சென்றுள்ளது.
இவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் ஒரு சில நாட்களிலேயே வெளியே வந்துவிடுவான் என்ற காரணத்தால் பொதுமக்கள் இவனிடம் கடும் அச்சமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் காட்டப்படும் வில்லன்களை விட மிகக் கொடுமையான வில்லத்தனங்களைச் செய்து வந்த ஜெகன் உட்பட்ட காவாலிகளை சட்டத்துறையினர் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.