Home Jaffna News யாழில் பிறந்த சிசுவை நிலத்தில் புதைத்த கொடூரம்! சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால் பரபரப்பு!!

யாழில் பிறந்த சிசுவை நிலத்தில் புதைத்த கொடூரம்! சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால் பரபரப்பு!!

14

யாழ்.வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேற்று (2) மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

வத்திராயன் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் நாயொன்று சிசுவின் சடலத்தை இழுத்துச் சென்றதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக நாயை விரட்டி, சடலத்தை மீட்டனர்.

பிரசவமான உடனேயே நிலத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் அதுவென்பது கண்டறியப்பட்டது.

நாய் இழுத்துச் சென்ற இடத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டது. நேற்று அந்த சிசு புதைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

வீடொன்றின் பின் பகுதியில் சிசுவின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டிலிருந்த பெண் பொலிசாரால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண் கணவனை பிரிந்து வாழ்கிறார்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 03/01/2023, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleசமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்ற சிரேஷ்ட வைத்திய அதிகாரி மீது தாக்குதல்