யாழ் புங்குடுதீவுப் பகுதியில் 46 வயதான நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த இரு மாதங்களுக்கு முன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்து தான் பிறந்து வளர்ந்த பகுதியில் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
யாழ் நகரப்பகுதியில் இன்னொரு மகனுடன் வாழ்ந்து வந்த தாயாரும் தனது மகன் வெளிநாட்டிலிருந்து வந்து தங்களது ஊர் வீட்டில் தங்க ஆசைப்பட்டதால் பிரான்ஸ் மகனுடன் புங்குடுதீவு வீட்டுக்கு சென்று தங்கியிருந்துள்ளார்.
பிரான்சிலிருந்து தனியே எதற்காக வந்தது என தாய் கேட்ட போது கொழும்பில் அலுவல்கள் சில இருந்ததால் வந்ததாக கூறி மகன் சமாளித்துள்ளார்.
இதே வேளை பிரான்சில் உள்ள மனைவியும் தனது கணவர் எதற்காக இலங்கை வந்தார் என தெரியவில்லை என மாமியாருக்கு எடுத்து கூறியுள்ளார்.
பிரான்சிலிருநத வந்து இரு மாதங்கள் ஆன நிலையிலும் அங்கு போகாது நின்ற மகனை தாய் சந்தேகத்துடன் விசாரித்துள்ளார். அதற்கு மகன் சரியான பதிலை வழங்காது இருந்துள்ளார்.
இந் நிலையில் பிரான்ஸ் குடும்பஸ்தர் தனது வீட்டின் பிற்பகுதியில் இருந்த மரத்தில் துாக்கு போட ஆயத்தமாகியுள்ளார். மரத்தில் ஏறி கயிற்றை கட்டுவதை அயல்காணிக்குள் நின்றிருந்த ஒருவர் அவதானித்துள்ளார்.
வெளிநாட்டிலிருநது வந்தவர் வித்தியசமான நடத்தையுடன் மரத்தில் ஏறி கயிறு கட்டுவதை பார்த்துக் கொண்டிருந்த அயலவர் அவர் கீழே இறங்கி கழுத்தில் கயிற்றை கட்டி முடிச்சுப் போடுவதை பார்த்தவுடன் உரத்து கத்தியுள்ளார்.
அதற்கிடையில் குறித்த நபர் ஏணியை தள்ளிவிட்டு தொங்கத் தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கு விரைந்த அயலவர் குடும்பஸ்தரை காப்பாற்றியுள்ளார்.
இவர் துாக்கில் தொங்குவதை பார்த்து கத்தியதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்துள்ளார்கள்.
அதன் பின்னர் குடும்பஸ்தரை அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தியும் தற்கொலைக்கு முற்பட்டதற்கான காரணத்தை அவர்கள் அறிய முடியவில்லை.
தாயாரும் மகனின் நடவடிக்கையால் கடும் ஏக்கம் அடைந்து சோர்ந்து போயிருந்துள்ளார். இதனையடுத்து மகனையும் தாயையும் அயவலர்கள் சேர்ந்து வான் ஒன்றில் ஏற்றி யாழ் நகரப்பகுதியில் உள்ள தமையனின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.
அதே வேளை மகன் தங்கியிந்த அறையை சோதனையிட்ட போது அங்கு அவரது பாஸ்போட் கவரில் கடிதம் ஒன்று காணப்பட்டுள்ளது.
அதில் தனக்கு எயிட்ஸ் உள்ளதாக சந்தேகம் உள்ளது எனவும் அதனால் தான் உயிர் மாய்ய முடிவு செய்ததாகவும் தனது மனைவியையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் தனது அண்ணனுக்கு கடிதம் எழுதி வைத்திருந்ததை அயலவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தற்போது இந்த விடயம் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை நேற்று மாலை குடும்பஸ்தர் மற்றும் அண்ணன், தாய் ஆகியோர் கொழும்புக்கு சென்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த தற்கொலை மற்றும் எயிட்ஸ் விபரங்கள் தொடர்பாக அயலவர் ஒருவரால் வைத்தியசாலை மற்றும் பொலிஸ் தரப்புக்கும் அறிவிக்கபட்டுள்ளது.