Home Today Jaffna யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

306
யாழில் நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார பிரிவினர் மீட்டு உரியவரிடம் கையளித்துள்ளனர்.

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பை அள்ளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவீ கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார்.

இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகராட்சிமன்ற நிர்வாக அதிகாரி மற்றும் நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஆகியோர் நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்திற்கு வெளியிலிருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொலிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நகராட்சி மன்ற சுகாதார பகுதினரின் நேர்மையான விரைந்த செயல்பாடு நகராட்சிமன்ற குடியிருப்பாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரசபையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீதியில் கழிவுகளை கொட்டாமல் இருந்தால் இவ்வாறான சம்பவங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று நகர சபை சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்றாஜ் தெரிவித்தார்.

யாழில் யாழில் யாழில் 

Previous articleகிளிநொச்சியில் காருடன் மோதி விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்
Next articleகிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here