Home Jaffna News யாழில் காதலித்து ஏமாற்றிய அரச அதிகாரியின் மகள்!! வீதி வீதியாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு!!

யாழில் காதலித்து ஏமாற்றிய அரச அதிகாரியின் மகள்!! வீதி வீதியாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு!!

11

7 வருடங்களாக இளைஞர் ஒருவரை காதலித்து பல இலட்சம் ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வேறு திருமணத்திற்கு இளம் பெண் ஒருவர் தயாராதாக தகவல் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆங்காகே ஒட்டப்பட்ட சம்பவம் ஓன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் புற நகர் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்க்கு அருகாமையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டியில்;-

நல்லூர் பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடைய மகள், கடந்த 7 வருடங்களுக்கு மேல் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

பல வருடங்கள் நீடித்த இவர்களின் காதலுக்கு ஒரு கட்டத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறித்த பெண் காதலனை பிரிய மறுத்து தொடர்ந்தும் காதலித்து வந்துள்ளார்.

அப் பெண்ணை நம்பிய அந்த இளைஞர் காதலிக்காக பல இலட்சங்களை செலவும் செய்துள்ளார்.

இதன் பின் காதலனை விட அதிக வசதி படைத்த ஒருவரை அப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க வீட்டார் முடிவு செய்தனர்.

பணத்தின் மீது மோகம் கொண்டதாலும், இந்த திருமணம் நடக்காவிட்டால் தான் இறந்து விடப்போவதாக அப்பெண்ணின் தாய் மிரட்டியதாலும், அப் பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தார்.

இதனால் காதலை மறந்து விடுமாறு காதலனை வர்ப்புறுத்தியுள்ளார்.

காதலி மற்றும் காதலியின் வீட்டரின் வர்புறுத்தலால் அந்த அப்பாவி இளைஞர் காதலையும், காதலுக்காக தான் செலவிட்ட பணத்தினையும் தியாகம் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் காதலித்து ஏமாற்றிய அரச அதிகாரியின் மகள்!! வீதி வீதியாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு!! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஇன்றைய ராசிபலன் – 05/01/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next article7 of the Best Fitness Center Management Games Available on Android and iOS