Home Jaffna News யாழில் கடைக்கு சென்ற 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 72 வயது தாத்தா...

யாழில் கடைக்கு சென்ற 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 72 வயது தாத்தா நையப்புடைப்பு!!

7

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வரும் முதியவரே கைவரிசை காண்பிக்க முயன்றுள்ளார்.

பொருள் வாங்க வந்த 10 வயது சிறுமியுடனே அத்துமீறியுள்ளார்.

கடையில் யாருமில்லாத சமயத்தில் தனியாக வந்த சிறுமியை, கடைக்குள் தள்ளிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி கூக்குரலிட்டுள்ளார்.

அந்த பகுதியால் சென்ற இளைஞர்கள், சிறுமியின் அவலக்குரலை கேட்டு, கடைக்குள் சென்று பார்த்த போது, முதியவர் எக்குத்தப்பான கோலத்தில் நின்றுள்ளார்.

இதையடுத்து, முதியவரை அடித்து துவைத்த இளைஞர்கள், மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 02/01/2023, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleஇன்றைய ராசிபலன் – 03/01/2023, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..