Home Jaffna News யாழில் கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்!

யாழில் கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்!

8

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் நேற்று திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு தோன்றியது.

யாழில் கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

அதனையடுத்து அவர்கள் சடலத்தினை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் நாய் இழுத்துச் சென்ற சிசு: ஏன் சிசுவை புதைத்தேன்?; தாயார் தெரிவித்த தகவல்!
Next articleயாழில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!