Home Accident News மோட்டர் சைக்கிளுடன் லொறி மோதி விபத்து : இளைஞன் பலி !

மோட்டர் சைக்கிளுடன் லொறி மோதி விபத்து : இளைஞன் பலி !

34

அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லொறி சாரதி கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாணிக்கபிள்ளையார் வீதி விநாயகபுரம் 4 ம் பிரிவைச்சேர்ந்த 25 வயதுடைய திருச்செல்வம் கிருஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் பகுதியில் இருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவில் இருந்து தங்கவேலாயுதபுரம் நோக்கி பயணித்த மோட்டர்சைக்கிளும் சம்பவதினமான நேற்று இரவு தங்கவேலாயுதபுரம் சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் லொறி சாராதியை கைது செய்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleயாழில் இ.போ.சவில் கஞ்சா கடத்திய இளைஞன் கைது!
Next articleமருமகன் தாக்கி மாமியார் பலி : மனைவி கவலைக்கிடம்