Home Tamil News மோட்டர் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவர் கைது!

மோட்டர் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவர் கைது!

14
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேசங்களில் மோட்டர் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவரை நேற்று புதன்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர் மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் பெண்களை மோட்டார்சைகிளில் இருவர் பின் தொடர்ந்து தங்க சங்கிலிகளை அறுத்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பிரதேசங்களை சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று புதுன்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் செட்டிபாளையம் கோவில் அருகில் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.

அத்துடன், கொள்ளையிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleஏறாவூரில் 9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 83 வயது முதியவர் கைது
Next articleஇன்றைய ராசிபலன் – 06.10.2023