Home Local news மூதூர் – சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு

மூதூர் – சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு

15

மூதூர் – சகாயபுரம் கிராமத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் ஒருவன் இறந்த சம்பவம் 22.12.2022 அன்று பதிவாகியிருந்தது.

இக்குடும்பம் யாசகம் செய்து தமது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள். இந்நிலையில் குறித்த சிறுவன் விசேட தேவையுடைய சிறுவனாக இருந்ததாகவும் இவர் சிலநாட்கள் சுகயீனமாக இருந்தநிலையில் உணவின்றி இறந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சிறுவன் இறந்த பின்னரே மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். எனினும் ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.

இதுபோன்ற மரணங்கள் விழிப்புணர்வு குறைவினாலும் ஏற்படுகின்றது. அத்துடன் இதுபோன்ற மரணங்கள் ஏற்படாதவண்ணம் அரச அதிகாரிகளும், மனிதநேயமுள்ளவர்களும் தடுக்க முன்வரவேண்டும்.

இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலை இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும்.

எனவே ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.

படம் :- சிறுவன் வசித்துவந்த வீட்டின் தோற்றம்

மாவட்டம் – திருகோணமலை
பிரதேச செயலக பிரிவு – மூதூர்
கிராம சேவகர் பிரிவு – ஜின்னா நகர் (மூதூர்)
கிராம சேவகர் பிரிவு இல – 224 E

மூதூர் - சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website மூதூர் - சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

மூதூர் - சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleகிளிநொச்சி பல்வைத்தியரால் பரலோகம் போக இருந்த யுவதி!! அதிர்ச்சி தகவல் இதோ
Next articleமனைவியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த கணவன்