Home Tamil News முல்லையில் மின்சாரம் தாக்கி 17 வயதான இளைஞன் பலி

முல்லையில் மின்சாரம் தாக்கி 17 வயதான இளைஞன் பலி

7

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடைஒன்றில் வேலைசெய்துவந்தார்.

தொழில் கருவிக்கு இன்று (14) காலை மின்இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தினை தொடர்ந்து இளைஞனின் உடலம் இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Previous articleகல்முனையில் பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ! கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பொலிஸார் பாராட்டு
Next articleஇன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !