Home நாட்டு நடப்புக்கள் மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ

மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ

330
தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற இரு தொழிலாளியை நாய்க் கூடத்தில் இருந்த பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று (21) கெக்கிராவ மின்சார அதிகார சபைக்குட்பட்ட தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்துள்ளனர்.

மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ

வீட்டிற்கு வந்து, வீட்டில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க போவதாக தெரிவித்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும், அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, ​​ ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த நாய் கூரை மீது இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

Previous articleமனநலம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை இடம்மாற்றுங்கள்; சரத் வீரசேகர
Next articleஅவுஸ்ரேலியாவில் பாலியல் லீலை புரிந்த சிங்கள வைத்தியர் லியனகேக்கு நடந்த கதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here