Home battinews மாணவிக்கு போதைப்பொருள் வழங்கி துஷ்பிரயோகம் ; A/L மாணவர்கள் இருவர் கைது

மாணவிக்கு போதைப்பொருள் வழங்கி துஷ்பிரயோகம் ; A/L மாணவர்கள் இருவர் கைது

17

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும், அவரின் நண்பருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleகாதலியின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்த வவுனியா நகரசபை உறுப்பினரின் மகன்!! பொலிசார் விசாரணை!!
Next articleரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம்