உணவு சாப்பிட்ட பின்னர் மேசையில் விழுந்த சோறு பருக்கைளை மாணவர்களின் நாவினால் அப்புறப்படுத்தும் தண்டனையை வழங்கும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
மாத்தறை -திக்குவளை கல்வி வலயத்திற்குரிய கொடஉட பிரதேசத்தின் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவர்களுக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிபரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தென் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்ததுடன் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த தண்டனை எதிர்கொண்டுள்ளனர்.
பாடசாலையின் இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்ட சோறு மேசையில் சிதறி கிடைந்துள்ளதுடன் மாணவர்கள் அதனை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அதிபர் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.