கட்டுவன, ருக்மல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மற்றும் மகன் இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தரான 27 வயதுடைய விஜயமுனிகே கிரிஷான் ஜயலத் மற்றும் அவரது தந்தை விஜயமுனிகே தர்மசேன, 61 வயது ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரும் வீரகெட்டிய அபகொலவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
அபகொலவெவ பிரதேசத்திலிருந்து ஊருபொக்க பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பிரேக் பழுதடைந்ததன் காரணமாக மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் கட்டுவன மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.