Home CRIME NEWS மனைவியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த கணவன்

மனைவியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த கணவன்

12

அம்பலாந்தொட்ட,பெரகம பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால், வெட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளதுடன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியத்தில் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் இன்று முற்பகல் 10 மணியனவில் வீட்டுக்கு வந்த போது, மனைவி வீட்டில் இருக்கவில்லை என்பதால், தொலைபேசி அழைப்பை எடுத்து மனைவியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

இதன் பின்னர் இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியத்தில் கணவன் கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்கியுள்ளதுடன் தான் அணிந்திருந்த மோட்டார் சைக்கிள் ஜெகட்டை பயன்படுத்தி மனைவியின் கழுத்தை நெறித்துள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபரான கணவன், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 45 வயதான பெண்ணே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை நடத்தி வரும் அம்பலாந்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமூதூர் – சகாயபுரத்தில் போசாக்குக் குறைவினால் சிறுவன் உயிரிழப்பு
Next articleவிஷ்ணு அவதாரத்தில்.. விஜய்.. ஆடீயோ லாஞ்ச் அலப்பரை வீடீயோ வைரல்.!