புத்தளம் – நவகத்தகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தர்ம மண்டபத்தில் இருந்து 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பௌத்த விகாரையின் தர்ம மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது தந்தையால் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் அதிகளவில் இரத்தம் சிந்தியுள்ளமையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த இளைஞர் இரவு வீடு திரும்பாத நிலையில், நீண்ட நேர தேடுதலின் பின்னர் தந்தை மற்றும் அப்பகுதி மக்களினால் தர்ம மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.