Home Astrology news மகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

மகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

18
மகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

மகர ராசி நேயர்களே, சிறப்பான பலன்களை வழங்கும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டு விளங்கும். ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசிக்கு அதிபதியான சனிபகவான் உங்கள் ராசியிலேயே தங்கி இருந்தாலும் உங்களைப் யோசிக்க வைத்து வேலையில் வெற்றியைத் தருவார்.

அதன் பிறகு, ஜனவரி 17 அன்று, சனி உங்கள் 2ம் வீட்டிற்குச் சென்று நல்ல நிதி நிலைமையை வழங்கும் கிரகமாக மாறும். உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் வெற்றி பெறலாம்.

உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருப்பதால் நீங்கள் நிறைய வேலைகளை முடிக்க முடியும். இது உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதம் குரு உங்கள் 4ம் வீட்டிற்கு மாறுகிறார். ஏற்கனவே ராகு அமர்ந்திருப்பதால் குடும்ப வாழ்க்கையில் சில டென்ஷன் இருக்கும். உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வரலாம் உங்கள் தன்னம்பிக்கை குறையலாம் இருப்பினும் பிற கிரகங்களால் வெற்றியை தொடர்ந்து பெறுவீர்கள்.

2023ம் ஆண்டு இறுதியில் தொழில் வாழ்க்கையில் சிறந்த வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கும். இது நாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். இந்த புத்தாண்டு ஏழரை சனியோடு தொடங்குகிறதே என்ற அச்சம் வேண்டாம். உங்கள் ராசியின் அதிபதியே சனி தான் அப்படி இருக்க அவர் எப்படி உங்களுக்கு கெடுதலை செய்வார்.

நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று அனைவரும் அறிந்த ஒன்று, முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி வரும் அவ்வளவு தான், மற்றபடி எந்த தொந்தரவும் இல்லை. இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும்.

மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும்.

மகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 கிடைக்கும் புத்தாண்டு பலன்கள் - மகர ராசி வரும் உங்கள் நல்ல இருக்கும் ராகு கேது சந்திரன் பலன்கள் ராசிபலன்கள் astology news tamil news

இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு எல்லா வகையிலும் நன்மையை தரும். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும்.

பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வாகன பயணத்தில் கவனமுடன் செயல்படவும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

உங்களை சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படாதவாறு தங்கள் பேச்சுக்கள் குறைத்து கொண்டால் நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும்.

தெய்வ பலத்தால் அனைத்தும் சுலபமாக கிடைக்கும். உத்யோகத்தில் சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் எதிராக சிலர் செயல்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பெரியளவில் முதலீடு செய்ய வேண்டாம்.

தொழில், வியாபாரத்தில் பண வரவு கூடும். மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து மற்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleதனுசு ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleகும்ப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023