Home CRIME NEWS பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மீது சந்தேகநபர் கத்திக்குத்து

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மீது சந்தேகநபர் கத்திக்குத்து

467
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக நபர் ஒருவரை கைது செய்வதற்காக எல்ல பொலிஸார் மேற்கொண்ட சோதனைக்கு நடவடிக்கையின் போது சந்தேகநபரால் கத்தியால் தாக்கப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல கொடுவெல பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்ற ஹலிஎல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரும், 34 வயதுடைய மாத்தறை தெனியயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பொ லிஸ் உத்தியோகத்தர்களே சம்பவத்தில் காயமடைந்ததுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் எல்ல கொடுவெல பிரதேசத்தை சேர்ந்த ‘நேவி சமன்’ (33 வயது) என அழைக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, ​​ சுற்றி வளைத்து அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையின் போது 8 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கைக்குண்டு, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின் ஆலோசனையின் பேரில் எல்ல பொ லிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப உப்ரேந்திர அபேகுணவர்தன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article16 வயதான மருமகள் கர்ப்பம்: 24 வயதான மாமா மாட்டினார்
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 31.08.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here