Home Local news பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் – ஆயுததாரி சுட்டுக்கொலை

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் – ஆயுததாரி சுட்டுக்கொலை

7

இரத்தினபுரி தெல்வல பிரதேசத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் இன்று அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெல்வல – பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட வேண்டிய சந்தேகநபர் இவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று காலை ஹன்வெல்ல – தித்தெனிய, கிம்புல்பெனய பிரதேசத்தில் ஆரம்பித்தனர்.

கைது செய்ய செல்லும் போது சந்தேக நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பொலிஸாரின் பதில் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 06/01/2023, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleஓடும் பஸ்சில் தாதியிடம் சில்மிசம் செய்த வைத்தியரிற்கு நேர்ந்த கதி