Home Local news பொது மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி

பொது மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி

13

அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்க முடியாத நிலை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் கட்டணம் அதிகரித்தால், இந்த ஆண்டு ஜனவரியில் 1,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரியில் 3,000 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 6,300 ரூபாயாகவும், 10,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 32,000 ரூபாயாக உயரும் என அவர் கணித்தார்.

Previous article25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி
Next articleகாணாமல் போன இளைஞனை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் !