Home Local news பேருந்தை செலுத்திய சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! ஆசனத்திலேயே உயிரிழந்த சாரதி

பேருந்தை செலுத்திய சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! ஆசனத்திலேயே உயிரிழந்த சாரதி

7

பேருந்தின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தான் செலுத்திய பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன் அந்த பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்த பேருந்த மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வீடொன்றின் மீது மோதியுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பிலியந்தலை 342 பஸ் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பேருந்து, கொட்டாவ பேருந்து நிலையத்துக்கு முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக இன்று அதிகாலை 5.45 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சாரதியினால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகிய பேருந்து அருகிலிருந்த மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வீட்டின் முன்பக்கத்தை மோதி நின்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேருந்தின் சாரதி, சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கபில பெரேரா (54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பேருந்தை செலுத்திய சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! ஆசனத்திலேயே உயிரிழந்த சாரதி - mutamil News - 24x7 Tamil Breaking News Website பேருந்தை செலுத்திய சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! ஆசனத்திலேயே உயிரிழந்த சாரதி - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு
Next articleஇன்றைய ராசிபலன் – 21/12/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..