Home Accident News பேருந்து மோதியதில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்தார்

பேருந்து மோதியதில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்தார்

17

ரஹல – அரநாயக்க வீதியில் ரஹல மருந்தகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக வந்த இலங்கை பேருந்து சபையின்பஸ் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த தவறியதில் பாடசாயவ்ருகின்றது.

இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 9 பேர் பள்ளி மாணவர்கள்.

உஸ்ஸாபிடிய ரிவிசந்த நடுநிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த அனைவரும் அரநாயக்க அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் பயணித்துள்ளதாகவும் அதிவேகமாக பயணித்த பஸ் அருகில் உள்ள மாமரத்தில் மோதி நின்றதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதென்னிலங்கையில் தொடரும் மர்ம கொலைகள்! கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Next articleபேருந்து தரப்பிடத்தில் காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு