Home CRIME NEWS பேருந்துக்காக காத்திருந்த தாதியின் கையை அறுத்து கைப்பையை கொள்ளையிட்ட நபர்கள்

பேருந்துக்காக காத்திருந்த தாதியின் கையை அறுத்து கைப்பையை கொள்ளையிட்ட நபர்கள்

9

நிட்டம்புவை பிரதேசத்தில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் உள்ள பேருந்த தரிப்பிடத்தில் நேற்று காலை பேருந்து வரும் வரை காத்திருந்த ஸ்ரீ ஸ்ரீயவர்தனபுர வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியின் கையை கத்தியால் அறுத்து காயத்தை ஏற்படுத்தி விட்டு, அவரிடம் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை பறித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் தாதியிடம் இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தாதி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாதியின் கணவர், பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகரான கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தாதி பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் தாதிக்கு அருகில் சென்று, அவரது கையை அறுத்து காயத்தை ஏற்படுத்தி விட்டு கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நிட்டம்புவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகணவனை வரவழைக்க வசியம் செய்ய சென்ற பெண் கூட்டு வன்புணர்வு
Next articleபெண் மருத்துவருடன் வனப்பகுதிக்குள் சில நாட்கள் முகாமிட்டிருந்த ஆறு பேர் கைது