Home Local news பெற்றோரினால் கைவிடப்பட்ட 12 வயது சிறுவன்! சிறுவர் இல்லத்தின் நேர்ந்த விபரீதம்

பெற்றோரினால் கைவிடப்பட்ட 12 வயது சிறுவன்! சிறுவர் இல்லத்தின் நேர்ந்த விபரீதம்

8

கடவத்தை – ராம்முத்துகல பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் 12 வயது குழந்தையொன்று மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆர்.எம்.மதுசங்க என்ற 12 வயதுடைய சிறுவன் பல வருடங்களுக்கு முன்னர் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சிறுவன் சிறுவர் இல்லத்தில் அமைந்துள்ள பகுதியில் மரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை சுமார் இருபது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதுடன், விபத்தின் பின்னர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேரத்தின் பின்னர் அருகிலுள்ள விகாரைக்கு வந்த அயலவரின் வாகன உதவி மூலம் குழந்தை ராகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கம்பஹாவிலுள்ள தனியார் மயானத்தில் பிற்பகல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.எம்.மதுசங்க என்ற 12 வயதுடைய சிறுவன் தாயாரினால் கைவிடப்பட்ட நிலையில் தந்தை மறுமணம் செய்துக்கொண்டதுடன் சித்தியின் பராமரிப்பின்றி சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பிரான்சில் இருந்து வந்தவர் எயிட்ஸ் பயத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி!!
Next articleயாழில் காதல் தோல்வி காரணமாக 19 வயது மாணவி மரணம்!!