பதுளை, மிகஸ்பிட்டிய கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடியதாக தேரர் உட்பட 7 பேர் பதுளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஏராளமான பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் 50 வயதுடைய தேரர் ஒருவரும் மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவரும் 60. 40 மற்றும் 30 வயதுடைய 4 பேர் மற்றும் 30 மற்றும் 25 வயதுடைய இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஸ்கேன்ங் இயந்திரம், ஸ்க்ரூடிரைவர்கள், ஆணி கத்தரிக்கோல், , 9 வோல்ட் பேட்டரிகள், மந்திர புத்தகங்கள், மண்வெட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரவின் ஆலோசனைக்கமைய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் தொல்லியல் சோதனைப் பிரிவின் சார்ஜன்ட் பிரேமச்சந்திர (36892) உள்ளிட்ட குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் உபகரணங்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.