புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் ஊழியர்களின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்ட போது, சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்ச்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது பணியாளர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கியதோடு, இந்த சம்பவத்தை பார்த்த யுவதிகள் இருவர் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் யுவதிகள் இருவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் மின்சாரம் தாக்கிய இளைஞர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.