Home Local news புகை, மதுபான விலைகள் எகிறின

புகை, மதுபான விலைகள் எகிறின

8

சகல வகையான மதுபானங்கள் மற்றும் புகைப்பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான கலால் தீர்வை 20%ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு இன்று (03) அறிவித்துள்ளது.

சிகரட் மீதான கலால் தீர்வையும் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.

90 ரூபாயாக இருந்த சிகரெட் விலை 105 ரூபாயாகவும், 70 மற்றும் 85 ரூபாயாக இருந்த சிகரெட்கள் விலைகள் 80 மற்றும்100 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!
Next articleஇன்றைய ராசிபலன் – 04/01/2023, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..