Home Jaffna News பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு !

பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு !

9

யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்,

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமனைவியை மண்வெட்டியால் தாக்கி கொன்ற கணவன் கைது
Next articleபாடசாலை முடித்து வீட்டிற்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! விரைந்து செயற்பட்ட கிராம மக்கள்