Home Local news பாடசாலை மாடிப்படிக்கட்டில் 16 வயது மாணவியை இறுக்கியணைத்து முத்தமிட்ட ஆசிரியர் கைது!

பாடசாலை மாடிப்படிக்கட்டில் 16 வயது மாணவியை இறுக்கியணைத்து முத்தமிட்ட ஆசிரியர் கைது!

9

ரத்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவிக்கு முத்தம் வழங்கிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிக்கும் முப்பத்தைந்து வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான இந்த ஆசிரியர், பாடசாலை மாணவியை பாடசாலை படிக்கட்டில் கையைப்பிடித்து இழுத்து முகத்தில் முத்தமிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவி பாடசாலை மைதானத்திற்குள் இருக்கும் போது, ​​ஆசிரியர் அழைத்து, வகுப்பறைக்கு சென்று பொருள் ஒன்றை எடுத்து வரும்படி கூறினார்.

மாணவி வகுப்பறைக்கு சென்ற போது, ஆசிரியரும் மாணவியின் பின்னால் சென்றுள்ளார். வகுப்பறையிலிருந்து திரும்பிய மாணவி படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த போது ஆசிரியர் அவரது கையைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி 11ம் ஆண்டு படித்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது தோழிகளிடம் கூறியதையடுத்து, வகுப்பு ஆசிரியையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அதிபரிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாடசாலை மாணவர்களும் ஆசிரியையை தாக்க முயன்றனர். இதன் காரணமாக ஆசிரியர் பாடசாலையில் உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் பாடசாலைக்கு சென்று மாணவியுடன் அத்துமீறிய ஆசிரியரை கைது செய்தனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 06/03/2023, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleவேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டிய இளைஞனிற்கு நேர்ந்த பரிதாபம்